­
­

#Kia #Seltos #KiaSeltos ஆகஸ்ட் 20, 21, 22.... களைகட்ட போகும் இந்திய கார் மார்க்கெட்!!!

ஆகஸ்ட் 20, 21, 22.... களைகட்ட போகும் இந்திய கார் மார்க்கெட்!!! #Kia #Seltos #KiaSeltos 

           கியா செல்டோஸ்: இந்திய மார்க்கெட் மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் கார் இதுதான். 


     தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் கார் இது. 

     எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கியா செல்டோஸ், வரும் ஆகஸ்ட் 22ம் தேதி இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
     கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு ஏற்கனவே இந்தியா முழுவதும் முன்பதிவு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

     கியா மோட்டார் நிறுவனத்தை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. 

     கியா செல்டோஸ் எஸ்யூவியில் எக்கச்சக்கமான வசதிகள் இடம்பெறவுள்ளன. இதில், பல வசதிகள் செக்மெண்ட் ஃபர்ஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

     கியா செல்டோஸ் எஸ்யூவி காரில், 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. 

     இவை அனைத்து வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானதாக இருக்கும். 

     கியா செல்டோஸ் எஸ்யூவியில் மொத்தம் 4 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன.





You Might Also Like

0 comments