­
­

Google Map வசதியுடன் வரப்போகும் புதிய Royal Enfield..

     இனி அறிமுகமாக இருக்கும் புதிய Royal Enfiled பைக்குகளில் Smart Phone connectivity வசதி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



     
      தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தனது புதிய
bike மாடல்களை களமிறக்க Royal Enfiled திட்டமிட்டுள்ளது.

       இதன்படி, இனி அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக் மாடல்களில் புளூடூத் (Bluetooth) இணைப்பு வசதியை அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் (Digital Instrument Cluster) வழங்கப்பட உள்ளது. இதன்மூலமாக, நேவிகேஷன் (Navigation) வசதியை நேரடியாக பெறும் வாய்ப்பும் கொடுக்கப்படும். Cruser வகை Bike-களுக்கு navigation வசதி சிறந்ததாக இருக்கும்.




     ThunderBird 350 மாடலுக்கு மாற்றாக புதிய தலைமுறை மாடலாக வரும் Meteor 350 மாடலில் இந்த Bluetooth இணைப்பு மற்றும் Navigation வசதிகள் அளிக்கப்படும் என்று பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

         Bluetooth மற்றும் Navigation வசதிகள் தவிர்த்து, Bike இயக்கம் குறித்த சில தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பையும் Digital Instrument Cluster மூலமாக வழங்குவதற்கும் Royal Enfiled திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும்.

      சில மாடல்களில் LCD திரையுடன் Turn by Turn Navigation வசதியும் அளிப்பதற்கு Royal Enfield திட்டமிட்டுள்ளது. இந்த வசதிகளை அளித்தாலும் விலையை மிக சவாலாக நிர்ணயிக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.


     


இதன் மூலமாக போட்டியாளர்களைவிட மதிப்புமிக்க மாடலாக மாறுவதோடு, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமாக அமையும் என்று
Royal Enfiled கருதுகிறது. வாடிக்கையாளர்கள் முகம் சுழிக்காத அளவுக்கு விலையை நிர்ணயிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


You Might Also Like

0 comments