Sports Look கொண்ட Skoda Kodiaq Scout SUV வரும் 30-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் …முழு விபரம்!!
- 1:14 AM
- By uniQue Group
- 0 Comments
Skoda நிறுவனம் புதிய Kodiaq Scout வகைகளை அறிமுகம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த கார்களை வரும் 30-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் அதிக உறுதியான தோற்றத்தில் இருப்பதுடன் கூடுதல் வசதிகளும் இந்த கார்களில் இருக்கும்.
இந்திய ஸ்பெக் ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட்கள் இன்னும் வெளியிடப்படவில்லை இருந்தாலும், ஆப்-ரோடு வெர்சன்களுடன் சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உறுதியான வெர்சன்கள், ஆப்-ரோடு ஸ்டைல் பேக்களுடன் பிளாக் பிளாஸ்டிக் கிளேடிங்களுடன் சில்வர் மெட்டாலிக் இன்சர்ட்களுடன் முன்புற மற்றும் பின்புற பம்பர்களில் குறைந்த அளவில் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, ஸ்போர்ட்ஸ் லுக் கொண்ட 19 இன்ச் அனந்தரடிக் அலாய் வீல்களுடன் ஸ்கவுட் பேஜ்களுடன் வெளிப்புறமாக இருக்கும். மேலும் இதில் சில்வர் ரூஃப் ரெயில் மற்றும் ORVM கவர்களுடன் வெளியாகியுள்ளது.
காரின் உட்புறத்தில், ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் டாப்-ஸ்பெக் L&K வகைகளில், 9.2 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், மரத்திலான இன்சர்ட்களுடன் கூடிய டாஷ்போர்டு மற்றும் அல்ச்ந்திரா அப்ஹோலஸ்டரிகளுடன் கூடிய சீட்களுடன் கூடிய ஸ்கவுட் லோகோவும் பொருத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, விர்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்கள் போன்றவை ஏற்கனவே இதில் இடம் பெற்றுள்ளது. ஸ்கவுட்களில் கூடுதலாக ஆப்-ரோடு டிரைவிங் மோடுகளுடன் இருக்கும்
இன்ஜின்களை பொருத்தவரை, ஸ்கவுட்கள் இந்தியாவில் வெளியாகும் போது, 150hp/340Nm ஆற்றலுடன் 2.0 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின்களுடன் இருக்கும். இந்த இன்ஜின்கள் 7 ஸ்பீட் DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். கூடுதலாக, சர்வதேச ஸ்பெக் கொண்ட இந்த கார்கள் நான்கு வீல் டிரைவ்களுடன் இருக்கும்.
விலையை பொறுத்தவரை, ஸ்கவுட்கள், ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட்களை தற்போது டாப் ரேஞ்சில் உள்ள
L&K வகைகளுக்கு மேலே நிலை நிறுத்தப்பட உள்ளது. ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட்கள், ஹோண்டா சிஆர்-வி மற்றும் வோக்ஸ்வாகன் டிகுவான் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
0 comments